தடம்புரண்டுவிட்டன

நமேக்கென்று என்ன தனித்துவம் இருக்கின்றது கலாசாரநிகழ்வுகள்தனும் பிரதிபலிக்கின்றனவா? என்றால்.அதுவுமில்லை;இருந்தன ஆனால் தடம்புரண்டுபோய்விட்டன என்பதுதான் உண்மை. எடுத்துக்காட்டாக ஒரு திருமணவிழாவில் மணமகன் வேட்டிக்குப்பதிலாக வேறுவிதமான ஆடையுடன் ஆரம்ம்பித்து  
குதப்பி வெட்டி நிறைவு பெறுகிறது சரிபோகட்டும்; பிறகலாசார ஈர்ப்பு ஆனால், பூப்புனித விழாவிலும்  குதப்பி வெட்டும் முறைமை எவ்வாறு நுழைந்தது ஏன் எதற்கு என்று தெரியாமல் வரும் சந்ததிக்கு தவறாக வழி காட்டுகிறோம் என்ற குற்றஉணர்வில்லையா?பூப்புனித விழா மேலைத்தேசத்தவர் உருவாக்கியதா? அல்லது எமது படப்பிடிப்பாளர்கள் திறமையினைக்காட்ட உள்நுளைத்ததா? மேலும் படப்பிடிப்பு என்பது நிகழ்வுகளை பதிதல் என்றதளம் மாறி படப்பிடிப்பிற்காக நிகழ்வுகள் நடத்துதல் என்ற நிலைமையே முன்னோங்கி நிற்கிறது. காலப்போக்கில் தாலிகூட பட்ப்பிடிப்பிர்க்கு ஏற்றவாறு பலமுறை கட்டுவார்கள் போல இவையொன்றும் திரைப்படப்பிடிப்பு இல்லை என்பதை மறந்துவிடுகின்றோம்.