தமிழ் மொழி


தமிழ் என்பது ஒரு மொழிதானே அதன் மேல் பற்று என்ற பெயரில் புதுமைகளை ஏற்றுக் கொள்ள தயங்கவேண்டுமா ? மொழி வளர்ச்சிக்குபுதுமைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுதடையாகாதா ? 

என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்டு இருக்கிறேன். பலருக்கும் இந்த கேள்வி இருக்கும்.பல்வேறு காலகட்டங்களில் தமிழும் பல மாற்றங்களை சந்தித்து வந்திருக்கிறது. இலக்கிய வளம் நிறைந்த மொழிகளில் தமிழ் மொழி முதன்மையும் தொன்மையும் நிறைந்தது என்பதை கால்டுக்கு பிறகுதான் கண்டு கொண்டிருக்கிறோம். இயல் இசை நாடகம் என்று இருந்த தமிழ் இன்று அறிவியல் தமிழ், மருத்துவ தமிழ், இணையத் தமிழ் என்று பல்வேறு வகையில் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. சிலர் இது போதாது பிறமொழி சொற்களை ஏற்றுக் கொள்வதால் தமிழ் மேலும் வளரும் என்கிறார்கள். ஒரு மொழி சிதைந்து காணாமல் போவதற்கு அவை பிறமொழி சொற்களை ஏற்றுக் கொள்வது காரணியாக அமைவதில்லை. 

எழுத்துக்களை ஏற்றுக் கொள்வதாலேயே முற்றுமுழுதாக மொழி சிதைந்து விடும் .ஆனாலும் பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொள்வதால் புதிய சொற்களை உருவாக்குதல் தடைப்படுகிறது ,அதே வேலை பழைய சொற்களை புதுப்பித்து பயன்படுத்த முடியாமல் பிறமொழிச் சொற்களை அப்படியே உள்வாங்கும் நிலை வந்துவிடும். எனவே நான் நினைக்கிறேன் கலப்பு அதிகம் ஆகஆக மொழியின் வளர்ச்சி குன்றும் சில நூற்றாண்டுகளில் மொழி தன் உருவத்தை இழந்து முற்றிலும் அழியும்.பிறமொழி எழுத்துக்களால் மொழி வளர்ச்சி என்பெதெல்லாம் வீண் வாதம். இது பல்வேறு மொழிகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் நடந்துள்ளது.இதற்க்கு எடுத்து காட்டாக நான் ஒரு தரவைமுன்வைக்க விரும்புகிறேன் உலகில் 6809 மொழிகளுள் 700 மொழிகளே எழுத வாசிக்க கூடியன இவற்றுள் 100 மொழிகள் மடுமே சொந்த வரி வடிவம் உடையவை எனினும் இவற்றுக்கெல்லாம் மூல மொழியாக பின்வரும் மொழிக்குடும்பங்கள் காணப்படுகின்றன
  1. எபிரேய மொழி
  2. கிரேக்க மொழி
  3. இலத்தீன் மொழி
  4. சமசுக்கிருத மொழி
  5. தமிழ் மொழி
  6. சீன மொழி
இவற்றுள் எபிரேய,கிரேக்க,இலத்தீன் மற்றும் சமசுக்கிருதம் என்பன பேச்சு வழக்கற்றுபோயுள்ளன;எனவே இவ்வாறான அழிவு நிலை நம் தமிழ் மொழிக்கு வருவதற்கு நாமே உரம் வீசலாமா?
சீனம் மற்றும் யப்பான் மொழிகளில் (ர்) என்ற எழுத்து பயன்பாட்டில் இல்லை.எனவே அவர்கள் பெயர் சொற்களில் வரும் 'ர்' ஐ தவிர்த்துவிட்டுதான் சொற்கள் அமைத்து அதன்படியே எழுதுகிறார்கள். சீனர்களோ, யப்பானியர்களோ அது தங்களின் மொழியின் பெரும் குறை என்றெல்லாம் சொல்வதில்லை. மேலும் அவர்களின் மொழியில் புதிய எழுத்துக்களை சேர்க்காததால் அவர்களுடைய மொழியில் பெயர் சொற்களின் சிதைவு உச்சரிப்பு நீங்கலாக வினைச் சொற்களில் பிறமொழி கலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.எடுத்துக்காட்டாக சிங்கப்பூர் என்பதை சீனர்கள் சிஞ்சப்பூ(ர்), ஆவுத்திரேலியா என்பதை ஆடேலியா என்றுதான் எழுதுவார்கள் அதற்கு அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை தங்கள் மொழியின் குறை என்றெல்லாம் வீணாக கற்பனை செய்து கொள்வதில்லை.இதுபோன்றே ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான பிரெஞ்சு மொழியில்( ஃ/க வரி )என்ற ஒலிவடிவம் ஏற்க்கபடுவதில்லை உதாரணாமாக கிட்லர் என்பதை இட்லர் எனவும் கொலன்ட் என்பதை ஒலன்ட் எனவும் மாறாக தலைநகர் பாரிசு என்பதை பாரி எனவும் பயன்படுத்துகிறார்கள்
ஆனால் எம்மவர்களிற்கு இவ்வாறான நன்னிறைவு மனநிலை காணப்படுவதில்லை உதாரணத்திற்கு ஆவுத்திரேலியா,ஒல்லாந்து,பிரான்சு என்று வடசொற்களை தவிர்த்து பயன் படுத்துகின்றோமா?சிந்தித்து பாருங்கள்.