வீரமாமுனிவர்

தமிழராக பிறந்து நம்மில் எத்தனையோ  பேர் தமிழ்மொழியை உரையாட்ப்பயன் படுத்துவதன்றி வேறொன்றும் செய்வதில்லை.  இதிலும் சிலர் தமிழை பயன்படுத்தும் போது அதை சிதைத்து சின்னாபின்னமாக்குகிறார்கள்; மாறாக இங்கு பிற மொழியை சேர்ந்த ஒருவர் நம் தமிழிற்கு ஆற்றிய பங்களிப்பை நோக்குவோம்;

இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் 1680கார்த்திகை  இல் பிறந்த இவரின் இயற்பெயர்  கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி என்பதாகும்.கிறித்தவ மதத்தை பரப்பும் நோக்கில் தமிழ்நாட்டில் நுழைந்த இவர் மதகொள்கைகளை பரப்பும் நோக்கில் தமிழ்மொழியைப்பயின்று காலப்போக்கில் தமிழ்மொழியின் சிறப்பை உணர்ந்து தமிழிற்காக உழைத்தார் .தமிழ் பெயர்களை  தடம்புரலவைக்கும் நம்மவர்மத்தியில்  தனது பெயரை செந்தமிழில் வீரமாமுனிவர் எனமாற்றியும்  தமிழின் சிறப்பை மேல் நாட்டவர்கள் அறியும் வகையில் ; திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.இவர் காவியம், பிரபந்தம், உரைநடை அகராதி, இலக்கணம், மொழிபெயர்ப்பு என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். சதுரகராதி கொண்டு நிகண்டுக்கு ஒரு மாற்றைக் கொண்டு வந்தவர். தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.கிபி 1712 இல் வீரமா முனிவர் பழைய நிகண்டு முறையைக் கைவிட்டு, அகராதி முறையில் சொற்பொருள் காணும் முன்னோடியாகத் திகழ்ந்து சதுரகராதி என்ற அகராதியை தொகுத்து வெளியிட்டார். முதன் முதலாக அகராதி என்ற பெயரில் வந்த நூல் இதுவேயாகும்.கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும் இரட்டை வழக்கு மொழியான தமிழில் பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும். கிருத்துவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்தது இந்த நூல் என்றால் மிகையாகாது.திருக்குறளில் அறத்தையும் பொருளையும் லத்தீன் மொழியில் பெயர்த்தவரும்  இந்த வீரமாமுனிவர்தான். ஆனால் இன்று நம்முடன் ஒட்டி உறவாடிய நம் தாய்மொழிக்காக நாம் என்ன கைமாறு செய்தோம்?;ஏன் சிதைக்காமலாவது உரையாடுகின்றோமா ? மாறாக சீவி சிங்காரம் பண்ணவேண்டாம் சின்னாபின்னமாக்காமலாவது காப்போமாக