தமிழ்மொழியின் நிலை



தமிழ்மொழியின் நிலை
இந்த நூற்றாண்டில் தமிழ் மொழியின் நிலை எவ்வாறு உள்ளது? என்பதை ஒவ்வொரு தமிழனும் சற்றுச் சிந்திக்க வேண்டும். பழங்காலம் முதற்கொண்டு இன்றைய காலம் வரை சகல சீரும், சிறப்பும் பெற்று, செம்மொழியாய் வெற்றிக் கொடி நட்டுவிட்ட து நம் தமிழ் மொழி.கூடவே இந்திய மொழிகளில் தொன்மை வாய்ந்த நம் தமிழ் மொழியின் இன்றைய நிலை என்ன? 
என்று சற்று நோக்குவோம். இன்று அதற்குள்ள சிக்கல்கள், குறைகள் என்ன என்று ஆய்வோம்.பழங்காலம் முதல் ஓலி,எழுத்து வடிவமுடைய நம் தமிழ் மொழி! இத்தமிழ் மொழி, ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், சிங்களம், டச்சு, போர்ச்சுக்கீசியன், உருது, துருக்கி, பாரசீகம், அரபு, மலாய் எபிரேயம் பிரெஞ்சு, கிரேக்கம், சீனம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற பிறமொழித் தாக்குதல்களால் சிக்கித் தவித்துக்கொண்டுள்ளது. இன்னும் ஒரு நூற்றாண்டில் மேலும் கலப்படம் ஏற்ப்படக்கூடிய அயாய நிலையிலுள்ளது. இன்று தமிழர்களில் சிலர் தப்பான மனநிலை அல்லது தாழ்வு மனநிலை காரணமாகவும் தமிழின் அழகை சிதைக்கிறார்கள் 
அதாவது உரையாடும் போது சில பிறமொழிச்சொற்களை பயன்படுத்தினால் தான் தம்மை அறிவாளியாக காட்டலாம் என்று எண்ணுகிறார்கள்.
தமிழ் மொழியில் பிற மொழிகளின் ஊடுருவல்கள் நம் தமிழ் மொழியில் மாற்று மொழிகளின் கலப்பு இருக்கத்தான் செய்கிறது. மேலே எடுத்துக் காட்டிய பிறமொழிக் கலவையை உற்று நோக்குங்கள். தவிர்க்க முடியாத ஒன்று தான்.ஏனென்றால் சில சமயங்களில் பிறமொழிகளின் சொற்களை பயன்படுத்த வேண்டியே உள்ளது எடுத்துக்காட்டாக உணவு வகைகளில் வெதுப்பி,குதப்பி என்று சொல்லும் போது எத்தனை பேருக்கு புரியும் மாறாக முறையே பாண், கேக் என்றால் உடனே புரிந்து கொள்ளலாம்.அதற்காக பிறமொழி சொற்களை பயன்படுத்துவது நாகரிகமானது நினைப்பவர்களும் தனித்தமிழில் கதைத்தால் நாட்டு வளப்பம் தெரியாதவர்கள் என்றும் நினைப்பவர்கள் மத்தியில் தமிழை எவ்வாறு சிதைக்காமல் பயன் படுத்த முடியும்? பிறமொழிகள் நம் தமிழ் மொழியோடு கலந்து, இணைந்து இயம்புவதை ஏற்றுக் கொள்ளலாம்.அதற்காக இடம் கொடுக்கப்படலாமா? நன்கு சிந்தித்து விடை காணுங்கள். செயல்படவும் முனைந்திடுங்கள்.