பொதுஅறிவு


உலக மொழிகளில் செம்மொழிகள் எவை
  • 2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட யுனெஸ்கோ நிறுவன அறிக்கையின்படி இன்று உலகில் 6700 மொழிகள் பேசப்படுகின்றன. இம்மொழிகளிலே எட்டு மொழிகள்தான் "செம்மொழிகள் எனப் பொதுவாக அடையாளம் காணப்பட்டுள்ளன

    1. கிரேக்கம்

    2. இலத்தீன்

    3. எபிரேயம்

    4. பேர்சியன்

    5. வடமொழி

    6. சீனம்

    7. அரபிக்

    8. தமிழ்



பூமியில் மிகப்பெரியவை 
உயர்ந்த பகுதி-எவரெசுட்சிகரம், நேபாளம்
தாழ்ந்த பகுதி-சாக்கடல், யோர்டான்
பெரிய கடல்-தென் சீனக்கடல், பசிபிக் பெருங்கடல்
நீளமான ஆறு-நைல், ஆப்பிரிக்கா
பெரிய பாலைவனம்-சகாரா, வட ஆப்பிரிக்கா
வெப்பமான பகுதி-தலோல்,டானகில்டிப்ரெசன்,எதியோப்பியா(34.4 செல்சியசு வருடம்)
குளிரான பகுதி-பிளோட்டோடேசன்,அண்டார்டிகா(-56.7 செல்சியசு வருடம்)
ஈரமான பகுதி-மௌசின்ராம், மேகாலயா, இந்தியா (11,873 மி.மீவருட சராசரி)
உலர்ந்த பகுதி-அட்டகாமா பாலைவனம், சிலி
கண்டம்-ஆசியா
உப்பு நீர் ஏரி-கசுபியன் கடல்
நன்னீர் ஏரி-சுப்பீரியர்,அமெரிக்கா – கனடா
நீர்வீழ்ச்சி- ஏஞ்சல், வெனிசுவேலா அமெரிக்கா
கழிமுகம்-சுந்தரவனம், இந்தியா
தீவு-கிரீன்லாந்து
தீவுக்கூட்டம் -இந்தோனேசியா 
சமவெளி-கங்கைச் சமவெளி
வனம்-கோனிஃபெரசு , வட ரசியா
இந்து ஆலயம்  -அங்கோர்வாட், கம்போடியா
விமான நிலையம் -மன்னர்காலத்சர்வதேசவிமானநிலையம் சவுதிஅரேபியா
கிறித்தவ தேவாலயம் -செயின்ட் பீட்டர்சு பசலிக்கா, வத்திக்கான் இத்தாலி 
இராணுவம்-மக்கள் விடுதலை இராணுவம், சீனா
திரையரங்கம்-ரோக்க்சி நியூயோர்க்,அமெரிக்கா
வைரச்சுரங்கம்-கிம்பர்லி,தென்னாப்பிரிக்கா
அணை-கெளல்,அமெரிக்கா
குடா-மெக்சிக்கோ 
அஞ்சல் துறை-இந்தியா
தேசியகீதம்-கிரேக் 128 வரிகள் 
பூங்கா-குலபா,சாம்பியா 22144 ச.கி 
சிறைச்சாலை-கார்கோவ்,இரசியா கொ.அ 40000 கைதிகள்
அரண்மனை-இம்ப்ரியல்,பீயிங்,சீனா 
விடுதி-ரோசிலா,மொசுகோ,இரசியா 
விளையாட்டரங்கு-செக்கோசிலோவாக்கியா 
தொடருந்துச்சந்திப்பு -கிராண்ட்சென்ட்ரல், நியூயோர்க்,அமெரிக்கா 
தொடருந்து நடைபாதை  - டார்விக் சுவீடன் 

உலகதினங்கள்

தை 
26 - உலக சுங்க தினம்
30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
மாசி 
14 - உலக காதலர் தினம்
பங்குனி 
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்
சித்திரை 
05 - உலக கடல் தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
மே
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
31 - உலக புகையிலை மறுப்பு தினம்
ஆணி 
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்
ஆடி 
01 - உலக மருத்துவர்கள் தினம்
11 - உலக மக்கள் தொகை தின
ம்ஆவணி 
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
புரட்டாசி 
08 - உலக எழுத்தறிவு தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்
ஐப்பசி 
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்
கார்த்திகை 
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்
மார்கழி 
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்


பொது அறிவுகள்


1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும்.

2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.

3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு

4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃபிலாப்ப் என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.

12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.

13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மொசுக்கோவில் உள்ள லெனின் நூலகம்.

14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு இசுபெயின்.

15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.

16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.

20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்யயி  தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும் 


கிரகம்பெல் 
 
அலெக்சாண்டர் கிரகம் பெல் எனும் இந்த விஞ்ஞானி செய்த முயற்சியின் பயனாக நாம் இன்று தொலைவில் உள்ளவர்களுடன் இலகுவாக உரையாடமுடிகிறது அதேவேளை இவரின் தாய் மற்றும் மனைவி காது கேட்க்க முடியாதவர்க்லாம். இந்த கண்டுபிடிப்பாளர் 03 பங்குனி 1847 இல் பிரித்தானியாவின் கொட்லாந்தில் பிறந்த இவர் தனது 75 ஆவது அகவையில் நீரிழிவு நோய்காரணமாக கனடாவில் 2 ஆவணி 1922 இல் காலமானார் எனினும் கண்டுபிடிப்பாளரின் காண்டு பிடிப்பு மனித இனம் வாழும் வரையும் வாழ்ந்து கொண்டிருக்கும்.


சிவா ஐயாத்துரை
இன்று நாம் உடனடி செய்தி 
பரிமாற்றங்களிர்க்காகஅதிகம்
பயன் படுத்தும் மின்னஞ்சல் 
முறையினை கண்டு பிடித்தவர் 
ஒரு தமிழர்., இவர் 2 மார்கழி 1963 
இல்  தமிழ்நாட்டில் பிறந்து தனது 
7வது வயதில் அமெரிக்காவில் குடியேறிய இவர் 14 ஆவது 
அகவையில் இக்கண்டுபிடிப்பை வெளிக்கொணரும்போது பலர் 
புதுப்புது விடயங்களை புகுத்தி உரிமைகொண்டாடினர் எனினும் 
இவர் போராடி தன கண்டுபிடிப்பிற்கான சட்டபூர்வமான 
காப்புரிமைப்படிவத்தை ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிம 
அலுவலகத்தில் இருந்து 1982இல் பெற்றுள்ளார் இன்று   
வீ.ஏ.சிவா.ஐயாத்துரை அமெரிக்காவின் எம்.ஐ.டி 
பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.


கிறித்தோபர் கொலம்பசு

இவர் ஒரு நாடு கான் கடல் பயணி,வணிகர்ஆவார் இவர் 1492இல் அட்லாண்டிக்கடலை கடந்துஅமெரிக்காவை  வந்தடைந்தமுதல்ஐரோப்பியர்ஆவார். அவர் இத்தாலியின் செனோவாஎன்ற ஊரைச் சேர்ந்தவர் என்றுகருதப்படுகிறது.கொலம்பசுஆசியாவிற்கு குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டு
பிடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு அமெரிக்காவிற்கான வழியைகண்டுபிடித்தார் கொலம்பசு அமெரிக்காவை கண்டுபிடித்தவராகக்கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்காவைப் பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும்.அதாவது து உலக நாடுகளுடனான இணைப்பை அமெரிக்காவுடன் ஏற்படுத்தினார் எனலாம்உண்மையாக கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் அல்லர், ஏனென்றால் அங்கே ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார்.முதல் 
ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள்,வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும்,கொலம்பசின்பயணமேஐரோப்பியர்களின்அமெரிக்கக்குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும்.

புவியிடங்காட்டி

புவியிடங்காட்டி(Globalglobal PostingSystem)அல்லது வழிசெலுத்தல் கருவி(Navigation) என்பது உலகத்தில் ஓரிடத்தைத் துல்லியமாக வானில் இருந்து அறியும் ஓர் கருவியும் திட்ட அமைப்பும் ஆகும். உலகைச் சுற்றி பல செயற்கைத் துணைக்கோள்களை நிறுவி, அதன் உதவியால், வானொலி மின்காந்த அலைகளை வானில் இருந்து வாங்கியும் செலுத்தியும், புவியில் ஓர் இடத்தில் ஓர் உணர்கருவி இருப்பதைத் துல்லியமாக அறியப் பயன்படும் கருவி அல்லது அமைப்பு ஆகும். இது அமெரிக்காவின் பாதுகாப்பு துறையால் முதன் முதலில் உருவாக்கப்பட்டது., இதை யாராலும் எளிதில் பயன்படுத்தமுடியும் என்பதுடன், எங்கேயும் எளிதில் பயன்படுத்த முடியும். இது பயண ஊடுருவுதல் பயன்பாட்டுக்காக பொதுமக்களிடையே பயன்படுத்தப்படுகிறது.செல்ல வேண்டிய இடத்துக்கு நிகழ்நேரத்தில் வழிகாட்டும் கருவி. முகவரியைக் கருவியில் இட்ட பின்பு, தானுந்து வழிகாட்டி நிலப்பட தரவுத்தளத்தைப் பயன்படுத்தி போக வேண்டிய வழியைத் தேர்வு செய்யும். தானுந்து வாகனங்கள் செல்கையில் பூமியில் இடத்தைக் காட்டும் கருவித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தானுந்து எங்குள்ளது என்பதைக் கண்டுணர்ந்து எப்படி செல்ல வேண்டும் என்ற தகவல்களைச் சொல்லும். மேற்கு நாடுகளில் தானுந்து வழிகாட்டி தற்போது பரவலான பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதியிலிருந்து இவை உலகம் முழுதும் இயங்கக்கூடியவையாக மாறின. புவியிடங்காட்டி உலகம் முழுதும் ஊடுருவலுக்கு ஒரு பயனுடைய கருவியாக குறிப்பாக நில வரைபடங்களை உருவாக்குவதற்கும், நில அளவை தொடர்பானவற்றுக்கும், வழியைப் பின்தொடர்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதுடன், தெளிவான நேரக்குறிப்பிற்காக பல பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதுநிலநடுக்கம் பற்றிய ஆய்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
முதல் செயற்கைக்கோள் ஊடுருவல் முறையானது, ட்ரான்சிட்எனப்படும். இது அமெரிக்காவின் கடற்படையால்பயன்படுத்தப்படுகிறது. 1960 ஆம் ஆண்டு இது முதன் முதலில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது. ஐந்து செயற்கைகோள்களின் தொகுப்புகளைப் பயன்படுத்தி இது ஊடுருவல் முறையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு நிலைப்பாட்டை தரமுடியும். 1967 ஆம் ஆண்டு அமெரிக்கக் கடற்படை டிமேசன் செயற்கைகோளை உருவாக்கி அதை வளிமண்டலத்தில் மிகவும் சரியான கடிகாரங்களைக் கொண்டு பொருத்தின. இந்தத் தொழில்நுட்பத்தையே ஜி.பி.எஸ் மிகவும் சார்ந்துள்ளது. 1970 ஆம் ஆண்டுகளில் நிலம் சார்ந்த ஒமேகா ஊடுருவல் முறை உருவானது. இது அலை வரிசை தொகுப்புகளின் ஒப்பீட்டின் அடிப்படையில் உலகசார் ரேடியோ ஊடுருவல் முறையில் முதலாவதாகத் தோன்றியதாகும்.
புவியிடங்காட்டி (gps) வடிவமைப்பானது ஒரே வகையான நில-சார் வானலை ஊடுருவல் முறையை சிறிதளவு சார்ந்து உள்ளது. லோரன் டெக்கா ஊடுருவல்கள் உள்ளிட்டவை 1940 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. இவை உலக போரின்போது பயன்படுத்தப்பட்டன. சோவியத் யூனியன் எப்பொழுது மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோளான இசுபுட்னிக் விண்ணில் ஏவியதோ அப்பொழுது, புவியிடம்காட்டி பற்றிய ஆர்வமும் அதிகரிக்கத் தொடங்கியது. டி.ஆர். ரிச்சர்டு பி கேர்னர் தலைமை அமெரிக்க அறிவியல் அறிஞர்களைக் கொண்டு இசுபுட்னிக் வானலை ஊடுருவல்களை பற்றி கவனித்து கொண்டிருந்தது. இசுபுட்னிக்கிலிருந்து வரும் குறியீட்டு அலைகள் டாப்ளர் விளைவுகாரணமாக செயற்கைக்கோளின் அதிர்வெண்ணை அதிகமாக்கியது. செயற்கைக்கோளை விட்டு தூரம் போகப் போக அவற்றின் அதிர்வெண் குறைந்து கொண்டே போகிறது. இந்தக் குறியீட்டு அலைகளின் சரியான இடங்களை அறிந்ததன் மூலம், அவர்கள் டாப்ளர் விளைவின் தாக்கத்தை அளவிடுவதன் மூலம் செயற்கைகோளையும் அவை சுற்றும் வட்டப் பாதையையையும் உணர்ந்தார்கள்.
கொரியன் விமானம் 007 சுட்டு வீழ்த்தப்பட்ட பின், 1983 ஆம் ஆண்டு யு.எஸ்.எஸ்.ஆர் இன் தடை விதிக்கப்பட்ட வளிமண்டலத்தில் சென்று ஜி.பி.எஸ்ஸை எளிமையான மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன்.செயற்கைகோள்கள் 1989 மற்றும் 1993 ஆண்டுகளுக்கு இடையே ஏவப்பட்டன. ஆரம்பத்தில் அதிகப்படியான குறியீட்டு அலைகள் ராணுவ உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்டது. எஞ்சிய குறியீட்டு அலைகள் சாதரண மக்களுக்காக ஒதுக்கப்பட்டது, பின்னர் அதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. கிடைக்கும் குறியீட்டு அலைகளைப் பொறுத்து பொதுமக்களுக்கு ஒதுக்குவது என்பது 2000 –ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது..
புவியிடம்காட்டி இயக்கத்திற்கு அடிப்படையானது எதுவென்றால் வளிமண்டலத்தில் அணு கடிகாரங்களைப் பொறுத்துவதாகும். இது 1955 –ஆம் ஆண்டு பரீட்வார்ட் விண்டேர்பெர்க் என்பவரால் கூறப்பட்டது. இதனால் மட்டுமே தேவையான மிகவும் சரியான இடம் சார் நிலையை நிர்ணயிக்க முடியும்.

தங்கம் 

தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.
இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது.
இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அனுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.