வதைப்பு

இன்று புலம்பெயர் தமிழரில் கணிசமான அளவினர் பிற புலங்களில் தமிழை விதைப்பதற்காக கலை நிகழ்வு மொழித்திறன் போட்டிஎன பெரிதும்பாடுபடுகின்றனர்,
சிலசமயங்களில் எல்லை தவறி தமிழ் கலைவிழா என்றபெயரில் பிற மொழிப்பாடல்களிற்கு நடனமென திசைமாறுவதையும் காணக்கூடியதாய் உள்ளது இவை ஒருபுறமிருக்க இன்னும்சிலர் தமிழை நன்றாக வதைக்கிறார்கள்,எவ்வாறெனில் தமிழ் அகாராதியே விருமம்பத்தகாத,அதாவது அநாகரிக சொற்களை  பிற மொழியினரிடம் நல்ல உச்சரிப்புடன் பயிற்றுவிக்கிறார்கள்.மாறாக வாழ்விட மொழிகளை பயில்வதில்  இல்லாத ஆர்வம்  பண்பற்ற சொற்களை பயிற்ருவிப்பதில் என்ன நாட்டம் .நல்ல வசனங்களை விதைக்கலாமே?ஏன் இந்த வதைப்பு ?மொழியும் உயிர்தானே!