இலக்கணம்


தமிழ் எழுத்துக்கள்:247 

      உயிர் எழுத்துக்கள் (12),
      மெய் எழுத்துக்கள்(18),
      உயிர்மெய் எழுத்துக்கள்(216),
      ஆய்த எழுத்து(1) 
ஆக 247 எழுத்துக்கள். 

உயிர் எழுத்துக்கள்:12

தமிழ் மொழிக்கு உயிர் நாடியாய் விளங்கும் ‘அ’ முதல் ‘ஔ’ வரையிலான எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள். ஓசையின் மூல காரணமாய் விளங்குவதாலும் இவை உயிர் எழுத்துக்கள் எனப்பட்டன.
இவற்றுள்
அ, இ, உ, எ, ஒ – ஆகிய குறுகிய ஓசை உடைய எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்பர்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ – ஆகிய நெடிய ஓசை உடைய எழுத்துக்களை நெடில் எழுத்துக்கள் என்பர். 

மெய் எழுத்துக்கள்:30

உயிர் இல்லாத உடம்பு(மெய்) ஆற்றலற்றது. அது போல், தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமலும் உயிர் எழுத்துக்களின் துணை கொண்டு இயங்கும் எழுத்துக்கள் ஆதலில் இவை மெய் எழுத்துக்கள் எனப்பட்டன. இதனை ஒற்று எழுத்து என்றும் அழைப்பர். 

உயிர்மெய் எழுத்துக்கள்:30 

உயிர் எழுத்து பனிரெண்டும், மெய் எழுத்து பதினெட்டும் சேர்ந்து உருவாகும் 216 எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள்.
எ.டு. க் + அ = க. 

ஆய்த எழுத்து:1 

ஃ – இதுவே ஆய்த எழுத்து.

தமிழ் எண் ஒழிப்பு

எண்ஒலிப்புச் சொல்
1ஒன்று,ஏகம்
10பத்து
100நூறு
1000ஆயிரம்,சகசிரம்
10,000பத்தாயிரம்,ஆயுதம்
1,00,000நூறாயிரம்,லட்சம்,நியுதம்
10,00,000நூறுலட்சம்,பத்து நூறாயிரம்
1,00,00,000கோடி
10,00,00,000அற்புதம்
1,00,00,00,000நிகற்புதம்
10,00,00,00,000கும்பம்
1,00,00,00,00,000கணம்
10,00,00,00,00,000கற்பம்
1,00,00,00,00,00,000நிகற்பம்
10,00,00,00,00,00,000பதுமம்
1,00,00,00,00,00,00,000சங்கம்
10,00,00,00,00,00,00,000வெள்ளம்,சமுத்திரம்
1,00,00,00,00,00,00,00,000அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000அர்த்தம்
1,00,00,00,00,00,00,00,00,000பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000பிரமகற்பம் ,முக்கோடி