தைப்பொங்கல்

தை மாதம் ஆனது எதிர்கால நம்ம்பிக்கை ஊட்டும் காலமெனலாம் ஏனென்றால் தை மாதத்தில் வயல் வெளி தோறும் நெல் மணிகள் செறிந்துள்ள பருவகாலமாகும் அது போலவே நீர் நிலைகள் நிரம்பி விவசாயத்திற்கு ஏற்ற அளவு நீர் வளம் பெருகி உள்ள காலமாகும் தை பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் கொண்டாடப்படும் திரு நாள் ஆகும் இதன் பிரதான நோக்கம் இயற்க்கைக்கு நன்றி செலுத்துதல் அதாவது இயற்கையின் அவசியத்தை நினைவூட்டுவதான ஓர் கலாசார விழா எனலாம் இவ்வாறான் முற்ப்போக்கு சிந்தனை உள்ளதான இத்திருநாளை தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா,சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

தை பொங்கலின் முதல் நாளே பட்டாசு வானவேடிக்கைகளுடன் கோலாகலமாக ஆரம்பிக்கின்றது, தை ஒன்றாம் நாள் அதி காலையில் துயிலெழுந்து நீராடி வீட்டு முற்றத்தில் தானியக்களினால் தயாரிக்கப்பட்ட மாவினால் கோலமிட்டு அதாவது சிறு பிரானிகளுக்கும் பசிபோக்கும் எனும் மனப்பான்பை வளர்க்கிறது  அத்துடன் அடுப்பு வைத்து தூய பானையில் நீரும் பாலும் ஊற்றி நன்கு கொதித்து நுரை வெளிவரும் போது  அரிசி இட்டு வெண்புக்கை ஆக்கி சூரிய உதயாகும்போது வாழை இலையில் படைத்து பின்னர் உறவினருடன் பகிர்ந்துன்பார்கள் இப்பொங்கல் திருநாள் உலகெங்கும் கொண்ட்டாடப்பட்டாலும் தமிழர் பூர்வீக பிரதேசங்களில் இதன் செழுமையை நாம் காணலாம்.