செம்மொழி

தமிழ், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளதுடன், இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையிலும் தமிழ் மூன்று ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது. 

சிங்கப்பூர் நாட்டிலும் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளதுடன், தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது.அத்துடன்,இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் குறிப்பாக, பர்க்லேயிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவரான, யோர்ச் .எல்.கார்ட்  போன்றவர்களுடைய முயற்சிகளைத் தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டில்,இந்தியஅரசினால் தமிழ்ஒருசெம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆணி 6 ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர்  அப்துல் கலாம் அவர்களால், இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.